தென்காசி மாவட்டத்தில் இருக்கும் அடவிநயினார்கோவில் நீர் தேக்கத்தில் கீழ்ப்பாசனம் பெறும் மேட்டுக்கால், கரிசல்கால்,பண்மொழிக்கால், வல்லாக்குளம் கால்,இலத்தூர்கால்,நயினாரகரம்கால், கிளம்புங்காடுகால்,கம்பளிகால், புங்கன் கால் சாம்பவர் வடகரை கால் மற்றும் இரட்டை குளம் கால்வாய் உள்ளிட்டவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் ஒட்டுமொத்தமான 7 1645 1.15 ஏக்கர் பாசன நிலங்களுக்கு பிசான சாகுபடி அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் வரும் 30-ஆம் தேதி 648 நாட்களுக்கு நாளொன்றிற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் 955 முப்பத்தி ஒன்பது மில்லியன் அளவிற்கு மிகாமன் தண்ணீர் திறந்து விடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருக்கின்றது.
அதேபோல தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் கடனா நீர் தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் அரசபத்து,வடகுறுவப்பத்த்துக்கால்,ஆழ்வார்குறிச்சி தென்கால் ஆம்பூர் பெருங்கால் பஞ்சம் புலிக்கால் காக்கநல்லூர் காங்கேயன் கால் உள்ளிட்டவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசனம் 9 1923ல் 22 ஏக்கர் நிலங்களுக்கு பாசன சாகுபடிக்காக கடனா நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் 30ஆம் தேதி வரையில் 148 நாட்களுக்கும் நாளொன்றுக்கு வினாடிக்கு 125 கன அடி வீதம் சுமார் 1650 3.7 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.
அதேபோல தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கருப்பாநதி நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பாசனம் பெறும் பெருங்கால்,பாப்பான்கால்,சீவலன்கால்,இடைக்கால்,கிளங்காடுகால்,ஊர்மேலழகியான்கால், உள்ளிட்டவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசனத்திற்காக இன்று முதல் 30ம் தேதி வரையில்148 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 25 கன அடி வீதம்1,189.34மில்லியன் கன அடிக்கு குறையாமல் நீர் திறந்துவிட வேண்டும் என ஆணையிட்டிருக்கிறது தமிழக அரசு.
தென்காசியில் ராமநதி நீர்த்தேக்கத்தில் பாசனம் பெறும் வடகால் தென்கால் பார்ப்பான் கால் மற்றும் புது கால் உள்ளிட்டவற்றின் கீழ் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் 4 1943இல் 50 ஏக்கர் நிலங்களுக்கு பிசான சாகுபடி ராமநதி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் 30ஆம் தேதி வரையில் 148 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 60 கன அடி வீதம் 823.91 மில்லியன் கன அடிக்கு குறையாமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது