வைகை அணையில் இருந்து இன்று திறக்கப்படும் நீர்! பெரு மகிழ்ச்சியில் மதுரை சுற்றுவட்டார விவசாயிகள்!

0
124

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் இன்று தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்ட இருக்கக்கூடிய செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, தாலுகா வைகை அணையில் இருந்து 58 கிராம திட்ட கால்வாய் 300 மில்லியன் கன அடி தண்ணீரை என்று முதல் நாள் ஒன்றுக்கு ஒரு வினாடிக்கு 250 கன அடி வீதம் திறந்துவிட அனுமதி வழங்கி தமிழக அரசு சார்பாக ஆணை பிறப்பித்திருக்கிறது.

இதன் மூலமாக திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கக்கூடிய சுமார் 2284 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வைகை அணை மதுரை மாவட்டத்தில் இருக்கிறது இந்த வைகை அணையால் மதுரையிலும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகள் வெகுவாக பயன்பெற்று வருகிறார்கள். வைகை ஆற்றில் தண்ணீர் வந்தால் அந்தப் பகுதி மக்கள் பெரு மகிழ்ச்சி அடைவார்கள் அந்த அளவிற்கு இந்த வைகை ஆறு அந்த பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.