Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காஷ்மீர் இனி இருக்காது வைகோ சர்ச்சை பேச்சு! புரியாமல் திணறும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள்?

காஷ்மீர் இனி இருக்காது வைகோ சர்ச்சை பேச்சு! புரியாமல் திணறும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள்?

புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை போன்ற மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து புதுவை முதல்வர் நாராயணசாமி ஹிந்தியை எதிர்த்தும் தமிழை ஆதரித்தும் பேசினார்.

தமிழகத்தில் தமிழுக்கு எதிராக மத்திய அரசு பிஜேபி அரசு முடிவெடுத்தால் ஒன்றாக போராடுவோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் இவ்வாறு பேசியுள்ளார்.

திருவண்ணாமலையில் தமிழியக்கத்தின் சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நாராயணசாமி  விரும்பாத மொழியை மும்மொழி கொள்கை என்ற மசோதா மூலம் தமிழகத்தில் பிஜேபி மோடி அரசு ஹிந்தியை தமிழகத்தில் திணிக்க நினைக்கிறது. மக்களுக்கு விரும்பாத செயல்கள் செய்வதே மத்திய அரசின் நோக்கம் என்றார். விரும்பாத மொழியை நம் மீது திணித்தால் ஒன்று சேர்ந்து போராடுவோம் எனக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து இந்த தமிழிலக்கிய புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்திருந்தார். விழாவில் பேசிய வைகோ, எதிர்காலத்தில் இந்தியாவில் காஷ்மீர் இருக்காது என்றும், இதுகுறித்து வழக்குப் போட்டாலும் கவலையில்லை என்றும் சர்ச்சையான பேச்சை முன்வைத்தார். இதனால் விழா அரங்கில் புரியாமல் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுவது காஷ்மீர் மாநிலத்தின் பிரச்சனையை தான் கூறுகிறார் என பலர் கூறுகின்றனர். ஏனெனில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உள் துறை அமைச்சர் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய படுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டது.

இதனால் பலர் இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்தனர். ஆனால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இது பிஜேபி அரசின் ஜனநாயக படுகொலை எனவும் இது கஷ்மீர் மக்களுக்கு எதிரான செயல் எனவும் தெரிவித்தார்.

மேலும் காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியே முதல் துரோகி எனவும் விமர்சித்தார். இதனால் மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே போர் மூண்டது. ஆனால் இன்று வைகோ கலந்து கொண்ட விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Exit mobile version