உடனடியாக முன்னேறிச் செல்ல அதுதான் ஒரே வழி! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்!

0
170

பாகிஸ்தான் நாட்டில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகள் ஏற்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் போராட்டத்தில் குதித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து அங்கு எதிர்க் கட்சியின் சார்பாக இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆகவே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆகவே பாகிஸ்தானில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் முன்னேறி செல்ல அதுதான் ஒரே வழி பிரதமராக யார் வர வேண்டும் என்பதை நேர்மையான தேர்தல் மூலமாக பொதுமக்கள் முடிவு செய்யட்டும் என்று தெரிவித்திருக்கிறார்.