Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாங்க மூன்று பேர் ஆகப் போகிறோம்! சஸ்பென்ஸை உடைத்த நட்சத்திர தம்பதியர்கள்!!

கடந்த 2017ஆம் ஆண்டு  பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா  நீண்ட நாட்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை அனுஷ்கா சர்மா நடிப்பை தாண்டி அவருக்கு படங்களை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இந்த லாக்டோன் காலகட்டத்திலும் இவருடைய தயாரிப்பில் உருவான படங்களும் சீரியல்களும் அமேசானில் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் “ விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் இணைந்திருக்கும் போட்டோவுக்கு கீழே, நாங்கள் இருவரும் மூவராக போகிறோம்  என்றும் எங்கள் குழந்தை வரும் 2021 ஆண்டு ஜனவரி மாதம் பிறக்கப் போகிறது என்ற பதிவை வெளியிட்டுள்ளார்.

அனுஷ்கா ஷர்மா அம்மாவாக போகிற செய்தியைக் கேட்ட கோலிவுட் பிரபலங்கள் கிரிக்கெட் நட்சத்திரங்களும் இந்த தம்பதியர்களுக்கு சமூக வலைதளங்களில் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Exit mobile version