சசிகலாவை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்..ஸ்டாலினின் அதிரடியான பேச்சு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

0
102
We are ready to accept Sasikala..Stalin's dramatic speech! Volunteers in shock!

சசிகலாவை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்..ஸ்டாலினின் அதிரடியான பேச்சு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அந்தவகையில் திமுக தலைவர் திருச்சி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் 9 வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அந்த பிரச்சாரத்தின் போது அவர் பேசியது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் முதலில் அனைவரையும் பார்த்து,என்னை உற்சாகமாக வரவேற்த்தமைக்கு நன்றி எனக் கூறினார்.மேற்கொண்டு அவர் பேசியது,உங்களிடம் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன்.நேருவைக் குறித்து நான் எதுவும் உங்களிடம் சொல்லத் தேவை இல்லை.அவர் எந்த பணியைக் கொடுத்தாலும் அதில் முத்திரை பதிப்பவர் என அவர் வேட்பாளரை புகழாரம் சூட்டினார்.அதன்பின்,தேர்தலுக்காக மட்டும் உங்களை நன் சந்திக்க வரவில்லை.உங்களின் சுக,துக்கங்களில் நான் பங்குகொள்ள உரிமையுடன் வந்திருக்கிறேன் என்றார்.

திமுகவின் தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் மதங்களின் மாண்பைக் காப்பது.கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என மோடி கூறியிருந்தார்.ஆனால் தற்போது வரை அந்த மாறி சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை எனக் கூறினார்.மோடி ஒரு ரூ.150 ரூபாய் கூட போடவில்லை என்றுக் கூறினார்.ஜெயலலிதா மறைவிற்கு பின் கட்சியையும்,ஆட்சியையும் காப்பாற்றுவது மட்டுமே அதிமுக-வின் இலக்காக இருந்தது என்றார்.

ஓபிஎஸ் செய்த தர்மயுத்த நாடகம் யாராலும் மறக்க முடியாது என சுட்டிக்காட்டி பேசினார்.கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஓபிஎஸ் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் நாங்கள் சசிகலாவை ஏற்றுக்கொள்ள தயாராக தான் உள்ளோம் ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை என்றார்.இன்றுவரை அந்த கட்சியினுள் பல கருத்து வேறுபாடுகள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது என்றார்.அவர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதை வெளிச்சம் போட்டு ஸ்டாலின் பேசினார்.விவசாயக் கடனை தள்ளுபடி செய்வேன் என்று கிராமசபைக் கூட்டங்களில் நான் பேசிக்கொண்டிருக்கும் ஓரிரு நிமிடங்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி என எடப்பாடி அர்வித்தார்.அதிலும் 12 ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் 5 கோடி மட்டுமே தள்ளுபடி ஆகும் நிலை உருவாகியுள்ளது.மீதமுள்ள 7 கோடியையும் திமுக ஆட்சி அமைந்தவுடன் தள்ளுபடி செய்வேன் என்றுக் கூறினார்.

திமுக வின் அறிவித்த திட்டங்களை காப்பி அடித்து தற்போது உங்களை கவர அவர் நிறைவேற்றிய அந்த அரசை நீங்கள் தூக்கி ஏறிய வேண்டும் என்றார்.அந்தந்த தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள வளர்ச்சிகளை நிச்சயம் இந்த வேட்பாளர்கள் நிறைவெற்றி கொடுப்பார்கள் என்றார்.எனவே தேர்தலில் வாக்களிக்க ஒரு போதும் மறந்து விடாதீர்கள்.உங்கள் ஓட்டு உதயசூரியனுக்கு இருக்கட்டும் என்றுக் கூறி உரையை முடித்தார்.