PMK DMK: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை வரப்போகும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றும் பட்சத்தில் பாஜக கூட்டணியை முறிப்பதாக பாமக ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
பெரியார் நினைவு நாளான நேற்று தமிழகத்தில் அனைத்து தலைமை மாவட்டத்திலும் பாமக இட ஒதுக்கீடு ரீதியாக போராட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் ராமதாஸ் அவர்களும் அதுவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அன்புமணி ராமதாசும் போராட்டம் நடத்தினர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உதயநிதி பேனர்கள் கிழிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேசிய அன்புமணி திமுக வன்னியர்களுக்கு ண்டான 10.5% இட ஒதுக்கீடு கொடுத்தால் கட்டாயம் திமுக-விற்கு ஆதரவு கொடுப்போம் என தெரிவித்திருந்தார்.இவ்வாறு அவர் கூறியது அரசியல் வட்டாரத்தை அனல் பறக்க செய்தது. மேற்கொண்டு அன்புமணி பேசியதற்கு திமுக அமைச்சர் சிவசங்கர், நாங்கள் இட ஒதுக்கீடு குறித்து சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த முடியாது.
அதற்கான அதிகாரம் எங்களிடம் இல்லை என்று பலமுறை கூறிவிட்டோம். இதற்கு மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. மேற்கொண்டு நாங்கள் இட ஒதுக்கீடு கொடுத்தால், நீங்கள் பாஜக-வை விட்டு வெளியேருவீர்களா என கேள்வி எழுப்பினார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக பாமக கௌரவ தலைவராக இருக்கும் ஜி கே மணி கூறியதாவது, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு 10.5% கொடுத்தால் கட்டாயம் நாங்கள் பாஜக-வை விட்டு வெளியேறுவோம்.
கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம், குறிப்பாக இந்த உத்தரவை வரப்போகும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளார். மேற்கொண்டு திமுக-விற்கு நாங்கள் நிபந்தனைகள் இல்லாத ஆதரவு அளிப்போம் எனவும் தெரிவித்தார். வரப்போகும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை கட்டாயம் வழங்காது என்பது தெரிந்த ஒன்றுதான். பாமக-வின் புது விதமான அணுகுமுறை வன்னியர்களுக்கு சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.