சூழ்நிலையை பார்த்துக் கொண்டு உள்ளோம்! தகுந்த நேரத்தில் செயல் படுத்துவோம்! – மத்திய அரசு!
தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து படையெடுத்து அதன் பெரும்பான்மையான பகுதிகளை கைப்பற்றி விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்க்கு காரணம் அங்கிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பபெற்றதுதான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். தற்போது அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதை தொடர்ந்து, தலீபான்கள் பெரும்பான்மையான மாகாணங்களை கைப்பற்றி விட்டனர்.
தலைநகர் காபூலும் அவர்களது முற்றுகையில் சிக்கி விட்டது. இதை தொடர்ந்து ஆப்கனின் தலைவர் பதவி விலகினார். தற்போது ஆட்சி அதிகாரம் தலீபான்கள் வசம் செல்வதால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. அதை தொடர்ந்து அவர்களிடையே பீதி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தூதரக ஊழியர்களை வெளியேற்றும் பணி தொடங்கி விட்டது. இந்தநிலையில், இந்தியர்கள் எப்போது வெளியேற்றப்படுவார்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு வட்டாரங்கள் இவ்வாறு கூறினார்கள்.
ஆப்கானிஸ்தானில் தற்போது வேகமாக மாறிவரும் சூழ்நிலையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. காபூலில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரக ஊழியர்களின் உயிரை எவ்வகையிலும் நாங்கள் பணயம் வைக்க மாட்டோம். அவர்களை அவசரமாக வெளியேற்ற வேண்டி இருந்தால், அதை செயல்படுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கே ஏற்படும் நிலவரத்தை பொறுத்து, அவர்களை வெளியேற்ற தொடங்குவோம் என்று கூறி உள்ளனர்.
மேலும் காபூலில் இருந்து இந்தியர்களையும், இந்திய தூதரக ஊழியர்களையும், அவர்களது குடும்பங்களையும் அவசரமாக அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் ராணுவ சரக்கு விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப் படுகிறது.