Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம்- செங்கோட்டையன்.

We are working with a sense of unity to win the by-elections - Sengottaiyan.

We are working with a sense of unity to win the by-elections - Sengottaiyan.

இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம்- செங்கோட்டையன்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவில் இருதரப்பினரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளனர். இன்று பகல் 12 மணிக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், இபிஎஸ் ஆதரவாளருமான செங்கோட்டையன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இன்று முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஆலய வழிபாடோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே குபேர மூலையில் தொடங்கப்பட்டு உள்ளது. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவதும் ஆகும். திண்டுக்கல் இடைத்தேர்தலை போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

நாளை மறுதினம் வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெறவுள்ளது. அதிமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி தான். இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமை உணர்வோடு பணிகள் ஆற்றி வருகிறோம் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Exit mobile version