உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை என்று தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கின்றார்.
தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில் வேல் யாத்திரை கடந்த 6ஆம் தேதி திருத்தணியில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில் தடையை மீறி யாத்திரை நடத்திய அந்த கட்சியினர் கைது செய்யப்பட்டனர் இதனை அடுத்து கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கின்ற நேரத்தில் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பரப்புரையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்தார்.தன்னுடைய முதல்கட்ட பரப்புரையை திருக்குவளையில் தொடங்கிய அவர் கைது செய்யபட்டார் இதனை தொடர்ந்து அவர் குத்தாலம் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன் தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தலைமை தான் முடிவு செய்யும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை யாத்திரைக்கு பெருகிய ஆதரவை பொறுத்துக் கொள்ள இயலாமல் தான் உதயநிதி தன்னுடைய பரப்புரையை ஆரம்பித்தார் என்று தெரிவித்தார்.
அதற்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வருகையின்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.