Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சசிகலா போட்ட அவுட் ஆஃப் பார்டர் திட்டம்! சமாளிக்குமா திமுக!

சமீபகாலமாகவே அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை இணைத்துவிடலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அந்த முயற்சியானது இன்றுகூட தொடர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஒருவேளை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் காங்கிரஸ் மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளுடன் இணைந்து கொள்ளலாம் என்பதே டிடிவி தினகரனின் கணக்காக இருந்து வந்தது.

நாம் ஆட்சியை பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை ஒரு கணிசமான அளவிலான வாக்குகள் நமக்கு கிடைக்கும் அதன் வழியாக நாம் சட்டசபைக்கும் செல்லலாம் என்று நினைத்திருக்கிறார் டிடிவி தினகரன். அதே நேரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனியாக போட்டியிடுவதை சசிகலா ஒருபோதும் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அந்த கட்சிக்கு மக்களுடைய ஆதரவு இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொண்டால் நம்மை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் அதைவிட நாம் அரசியலை விட்டு ஒதுங்கியே இருந்த விடலாம் என்று தினகரன் இடம் தெரிவித்திருக்கின்றார் சசிகலா.

அதன் வெளிப்பாடாகவே சமீபத்தில் அவர் தான் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக ஒரு அறிக்கை விட்டிருக்கின்றார். ஆனாலும் சசிகலாவின் எண்ணம் தெரிந்து இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளாத டிடிவி தினகரன் தொடர்ந்து அரசியலில் சில பல வேலைகளை செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. தினகரன் சமீப காலமாக அதிமுகவில் பெரிய அளவில் விமர்சனம் செய்யாமல் இருப்பதற்கு காரணமே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அதிமுக தன்னுடன் இணைத்துக் கொள்ள சம்மதம் தெரிவிக்கும் என்ற காரணத்தினால் தான் என்று சொல்கிறார்கள்.

நாம் வெற்றி பெறப்போவதில்லை என்பது தெரிந்தும் தமிழகத்திலே அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி அவர்களை பெரிய அளவில் செலவு செய்யவைத்து நம்முடைய விசுவாசிகளை கடனாளியாக நிறுத்துவது நல்லது அல்ல அதிமுகவில் இருக்கின்ற முக்குலத்தோர் வாக்குகள் அனைத்தும் நம்மால் சிதறி போனால் அது நம்முடைய சமுதாயத்தினரின் தோல்விக்கு காரணமாக மாறிவிடும். அதுபோன்ற ஒரு நிலையில் இருந்து மீளவே முடியாது என எச்சரிக்கை செய்திருக்கின்றார் சசிகலா. இருந்தாலும் டிடிவி தினகரனின் மன எண்ணம் வேறுமாதிரியாக இருந்திருக்கின்றது. அதிமுக வெற்றியை தடுத்து நிறுத்தினாலே நம்முடைய செல்வாக்கு அதிகரித்துவிடும் அதன் மூலமாக கட்சியும் நம் கைக்கு வந்துவிடும் என்பதே அவருடைய எண்ணமாக இருந்து வந்திருக்கிறது.

இருந்தாலும் சசிகலாவிற்கு அதிமுகவை மொத்தமாக விழுவதற்கு மனமில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த கட்சியில் இணைய விட்டாலும் பரவாயில்லை திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே அவருடைய நீண்டகால கணக்காக இருந்து வருவதாக சொல்கிறார்கள்.

அதன்படியே நாம் அரசியலில் இருந்தால் அம்மாவின் விசுவாசிகளின் அநேகம் நபர்கள் நம்முடன் நிற்பார்கள் நாம் அரசியலை விட்டு ஒதுங்கி கொண்டால் அவர்கள் வேறு வழியில்லாமல் அதிமுகவிற்கு சென்று அந்த கட்சிக்கு அவர்களுடைய ஆதரவை கொடுப்பார்கள் அதற்காகவாவது நாம் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்ளலாம் என்று முடிவு செய்தே அவர் அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவை அறிவித்தார் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் சசிகலாவின் இந்த முடிவு நிரந்தரமான முடிவு அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இருக்கும் சூழ்நிலையில், சசிகலா அரசியலில் இருந்தால் அது அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதற்காகவே அவர் இவ்வாறு ஒரு முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது ஒருவேளை நாளை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றபின்னர் எப்படியாவது அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை மனதில் வைத்து அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என்று தெரிவிக்கிறார்கள்.

Exit mobile version