அதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

0
116

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில் மழை நீர் சூழ்ந்திருக்க கூடிய பகுதிகளை நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருக்கின்ற பொது மக்களுக்கு அரிசி காய்கறி உட்பட பல நிவாரண பொருட்களை வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.

இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார் அப்போது அவர் தெரிவித்ததாவது,

தற்போதைய அரசு சரியான முறையில் திட்டமிட்டு செயல்படாததன் காரணத்தால், மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சை, உள்ளிட்ட இடங்களில் கனமழை காரணமாக, நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கின்றன. நானும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும், நாளைய தினம் சென்று விவசாயிகளை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறோம் என கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

மாநில அரசின் சார்பாக வெள்ளம் பாதித்த பகுதிகளை கண்டுபிடித்து நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினால், திமுக வின் சார்பாக நானும், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களும் மத்திய அரசிடம் வலியுறுத்தி நிவாரண நிதியை விடுவிப்பதற்கு கேட்டுக் கொள்வோம் என கூறி இருக்கிறார் இ.பி.எஸ்.

மேட்டூர் அணை உபரி நீர் கடலில் கலக்காமல் நீரேற்று நிலையம் மூலமாக 100 ஏரிகளின் நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம்.  நீர் நிரப்பும் திட்டம் தற்சமயம் முடிந்திருக்க வேண்டும். ஆனால் இந்த திட்டம் தாமதமாகி வருகின்றது .இது தொடர்பாக ஏற்கனவே சட்டசபையில் நான் தெரிவித்திருக்கிறேன்.

ஆகவே நீர்ப்பாசனத்துறை அமைச்சர் இந்தத் திட்டத்தில் கவனம் செலுத்தி உடனடியாக இந்த பணியை நிறைவேற்றி மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் கடலில் கலக்காமல் நீரேற்று நிலையம் மூலமாக நூறு ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை முடித்து வைக்க வேண்டும், பருவமழை காலத்திற்குள் மூன்று ஏரிகளும் உபரி நீரை விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என கூறியிருக்கிறார்.

மழை நீர் தேங்குவதை நாங்கள் குற்றச்சாட்டாக கூறினாலும், அதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு எதிர்க்கட்சியை மிரட்டும் என்ற விதத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். பொது மக்கள் படும் துன்பங்களை, துயரங்களை, நாங்கள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் அவர் விசாரணை கமிஷன் கொள்வதாக தெரிவிக்கிறார் அது தொடர்பாக நாங்கள் கவலைப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.