Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பயங்கரவாத விதைகளை நாங்கள் விதைத்துள்ளோம்! பாதுகாப்பு துறை மந்திரி வேதனை! 

பயங்கரவாத விதைகளை நாங்கள் விதைத்துள்ளோம்! பாதுகாப்பு துறை மந்திரி வேதனை! 

மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் பலியான சம்பவத்தில் பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி வேதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. அங்கு உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. அதில் போலீசார், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படைவீரர்கள் அங்கு தொழுகை நடத்துவர். அங்கே செல்ல 4 அடுக்கு பாதுகாப்பு அடுக்கை கடந்து தான் செல்ல வேண்டும்.

அங்கு திங்கட்கிழமை வழக்கம்போல்  மசூதியில் போலீசார் ராணுவ வீரர் உள்ளிட்டோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்கு மத்தியில் இருந்த பயங்கரவாதி ஒருவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளான். இதனால் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து அந்தப் பகுதியே அதிர்ந்தது. மசூதியின் ஒரு பகுதி இடிந்து அங்கு தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மேல் விழுந்தது. இதில் பலர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 170 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு தொழுகைக்காக 300 முதல் 400 போலீசார் வரை வந்துள்ளனர். குண்டு வெடித்ததில் மேற்கூரை மற்றும் மசூதியின் ஒரு பக்க சுவர் சரிந்து தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மேல் விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து அந்த நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரி கவாஜா ஆசிப் பேசும்போது நான் நீண்ட நேரம் பேச போவதில்லை. தொடக்கத்திலிருந்து நாங்கள் பயங்கரவாதத்திற்கான விதைகளை விதைத்தோம். அதன் பலன் கிடைத்து விட்டது என வேதனை பொங்க பேசியுள்ளார்.

குண்டு வெடிப்பு நிகழ்த்திய நபர் இறைவணக்கத்தின் போது தொழுகை நடைபெறும் பகுதிக்கு முன்னால் நின்று உள்ளார். இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளில் கூட இறைவனை வழிபடும் போது யாரும் கொல்லப்பட்டதில்லை. இந்த வேதனையான சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

மேலும்  பெஷாவார் குண்டுவெடிப்புக்கு யார் பொறுப்பானவர்கள் என ஆசிப் கேள்வி எழுப்பி உள்ளதாக டான் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஒன்று மொத்த நாடும் பயங்கரவாதத்திற்காக  எதிராக ஒருங்கிணைய வேண்டும். அதன் பின்னரே நாம் போராட வேண்டி உள்ளது.

எந்த ஒரு மதம் மட்டும் வகுப்பினருக்கு இடையே பயங்கரவாதம் வேற்றுமைப்படுத்துவது இல்லை. மதத்தின் பெயரால் உயிர்களை பலி கொள்ள பயங்கரவாதம் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

 

Exit mobile version