Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்

ஜனநாயகத்தை காப்பாற்ற நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.  இது தொடர்பாக ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும்  சூழலில்,  பா.ஜகவோ அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்கும் செயலில் இறங்கியுள்ளது. 2018-ல் ராஜஸ்தான் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை, சதி செய்து கவிழ்க்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் செய்ததை போல், தற்போது ராஜஸ்தானிலும் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றுகிறது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பதை  பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கள் அரசியலமைப்பு உரிமைகளை மதித்து உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என கோருகிறோம். எங்களுடன் இணைந்து ஜனநாயகத்துக்காக குரல் கொடுங்கள்” என்று  தெரிவித்துள்ளார்.  ஜனநாயகத்துக்காக பேசுங்கள் #SpeakUpForDemocracy  என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்து ராகுல் காந்தி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version