Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கூட்டம் போட்டாலே மட்டன் பிரியாணி தான்! ராஜேந்திர பாலாஜி காரசார பேச்சு!

தேர்தல் வந்துவிட்டால் கொடுப்பதும் தெரியக்கூடாது, வாங்குவதும் தெரியக்கூடாது, எடுப்பதும் தெரியக்கூடாது. அனைத்தையும் ரகசியமாக ஆலோசனை செய்வோம் எவ்வாறு வெற்றி பெறுவது என்று எங்களுக்கு தெரியும் என பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கின்றார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எங்களுடைய கட்சி கூட்டம் போட்டாலே அனைவருக்கும் மட்டன் சாப்பாடு தான் என்றும், கெடாவெட்டு தான் என்றும், தெரிவித்திருக்கின்றார். எல்லாருக்கும் சாப்பாடு போட்டு அரசியல் செய்யும் ஒரு இயக்கம் தான் அதிமுக என்று தெரிவித்திருக்கின்றார்.

எதிர்க்கட்சி ஒரு ஐம்பெரும் தலைவர்கள் மட்டுமே இருக்கின்ற கட்சி எனவும், அந்த கட்சி வடநாட்டு காரரை நம்பிதான் இருக்கின்றது எனவும், அவர் தெரிவித்தால் ஓட்டு போட்டு விடுவார்களா மக்கள் என்றும் கேட்டு இருக்கின்றார்.

தற்சமயம் தேர்தல் எதுவும் நடைபெறவில்லை, பத்திரிகையாளர்களும் இதனை பதிவு செய்து கொள்ளலாம் எந்தப் பிரச்சினையும் இல்லை எதுவும் கவலை இல்லை இதையெல்லாம் இப்போது தான் பேச முடியும். தேர்தல் நேரம் வந்துவிட்டால் கொடுப்பதும் தெரியக்கூடாது, வாங்குவதும் தெரியக்கூடாது, எடுப்பதும் தெரியக்கூடாது, ரகசிய கூட்டம் மற்றும் ரகசிய ஆலோசனை அனைத்தையும் செய்வோம். எவ்வாறு வெற்றி பெறுவது என்று எங்களுக்கு தெரியும் திமுகவிற்கு இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் பௌத்தர்கள் யாருடைய ஓட்டும் கிடைக்கப்போவதில்லை. திமுக வாடி வதங்கி நொந்து நூலாகி சாகும்வரை திமுகவிற்கு ஓட்டுப் போட நினைப்பவர்கள் மட்டும் தான் ஓட்டு போடுவார்கள்.

இன்றும்கூட திமுக பத்துக்கு பத்து அறையில் இருக்கின்றது அண்ணா ஆரம்பித்த திமுக இப்போது இல்லை ஸ்டாலின் வைத்திருக்கும் பெயர் தமிழ் பெயர் இல்லை. ரஷ்ய நாட்டின் பெயரை வைத்துக்கொண்டு தமிழ் பற்றி பேசும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை. தமிழர்களைப் பற்றி பேசும் உரிமையை கூட அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமே இருக்கின்றது தமிழுக்கும், தமிழருக்கும் துரோகத்தை செய்துவிட்டு தமிழை விற்று பிழைப்பு நடத்தும் கூட்டம் தான் திமுக என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றார் அமைச்சர்.

Exit mobile version