நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வரை நாங்கள் இதை தொடர்வோம்! – ராகேஷ் டிகாயிட்!

0
153
We will continue this until it is passed in Parliament! - Rakesh Dekoit!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வரை நாங்கள் இதை தொடர்வோம்! – ராகேஷ் டிகாயிட்!

இன்று காலை 9 மணி அளவில் நாட்டு மக்களிடையே மோடி தனது உரையாற்றினார். அப்போது அவர் இவ்வாறு விளக்கி கூறினார். விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய ஏதுவான பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

மூன்று வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொண்ட விவசாயிகளுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட்டு உள்ளது. மூன்று வேளாண் சட்டங்களின் நலன்களை விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு எங்களால் புரிய வைக்கவே முடியவில்லை.

அதன் காரணமாக அந்தச் மூன்று சட்டங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். ஒரு வருடத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு வெற்றி என பஞ்சாப் விவசாயி கோல்டன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இந்த விவசாய போராட்டத்தில் எங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம் என்றும் கூறியுள்ளார். இருந்தாலும் இந்த போராட்டம் உடனடியாக வாபஸ் பெற முடியாது. இதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காக காத்து இருக்கிறோம் என்றும் விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் ட்வீட் செய்துள்ளார். விவசாயிகளின் மற்ற பிரச்சனைகளையும் அரசு விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.