தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்!! பாஜக செயலாளர் ஹெச். ராஜா!!
கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட போவதை பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜக ஆட்சியில் அமல்படுத்திய பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஆனால், பாஜக ஆட்சியில் இருந்த போது தான் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற எந்த இட ஒதுக்கீடும் வழங்கவில்லை. திராவிட முன்னேற்ற கழகம் சமூக நீதிக்காக வெளி வேஷம் போடுகிறார்கள். ஆனால் உண்மையான சமூக நீதியை செயல் படுத்திக் கொண்டிருப்பது பாஜக தான். மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என அறிவித்துள்ளது. இது குறித்து எங்களுக்கு விண்ணப்பம் எதுவும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
ஆனால் பயப்படத் தேவையில்லை, தமிழக விவசாயிகளின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் வரும் முன் காப்பதற்காகவும் இது ஒரு தடுப்பு நடவடிக்கை ஆகும். திமுக டெல்டா விவசாயிகளின் முதுகில் குத்தியது என்றும் குறிப்பிட்டார். விவசாயிகளின் முதுகில் குத்திய நபரை இறந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எனவும் ராஜா கூறினார் உண்ணாவிரத போராட்டத்திற்கு தடை விதித்தால் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். ஒரு வேளை தடை விதித்தால் தமிழக விவசாயிகளின் துரோகி திமுக என்பது நிரூபனம் ஆகிவிடும் தெரிவித்தார்.