இனிமேல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டோம்!!! அமேசான் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

0
106
#image_title

இனிமேல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டோம்!!! அமேசான் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

வரும் செப்டம்பர் 19ம் தேதியில் இருந்து கேஷ் ஆன் டெலிவரியின் பொழுது 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கப் போவது இல்லை என்று பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் மே மாதம் 19ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மேலும் இதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இதையடுத்து மக்கள் தங்கள் கைகளில் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தி சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், டாஸ்மாக் கடைகள் அனைத்திலும் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்ததால் இருந்து அமேசான் நிறுவனம் முன்வந்து தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளும் என்று அறிவித்திருந்தது. தற்பொழுது அமேசான் நிறுவனம் செப்டம்பர் 19ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மாட்டோம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதாவது அமேசான் நிறுவனம் டெலிவரி செய்யும் பொழுது அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கேஷ் ஆன் டெலிவரி வசதி வழங்கப்படும். அதாவது பொருள்களை பெற்றுக் கொண்டு பின்னர் பணம் செலுத்தும் வசதி ஆகும்.

அந்தவகையில் அமேசான் நிறுவனம் கேஷ் ஆன் டெலிவரியின் பொழுது 2000 ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று வந்தது. தற்பொழுது அமேசான் நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதியில் இருந்து கேஷ் ஆன் டெலிவரியின் பொழுது 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்கப்பட மாட்டாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதாவது செப்டம்பர் 30ம் தேதியுடன் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பச் செலுத்தும் காலக்கெடு முடியவுள்ள நிலையில் அமேசான் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்டு மாதம் 31ம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் 87 சதவீதம் நோட்டுக்கள் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், 13 சதவீத நோட்டுகள் சில்லறையாக மாற்றிக் கொடுக்கப்பட்டதாகவும் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.