Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரிவினைவாத போக்கினை தீவிரமாக எதிர்த்து நிற்போம்!! பா ரஞ்சித்!!

We will strongly oppose the trend of separatism!! Ba Ranjith!!

We will strongly oppose the trend of separatism!! Ba Ranjith!!

டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட வருகிறது. இந்நாளில் பல திரை பிரபலங்கள் அம்பேத்கர் குறித்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் சிலருடைய கருத்துக்கள் ரசிகர்களிடையே மற்றும் பொதுமக்களிடையே அதிக கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருக்கிறது. அதில் குறிப்பாக இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியோரின் வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள கருத்துக்களை இந்த பதிவில் காண்போம்.

இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தன்னுடைய வலைதள பக்கத்தில் அம்பேத்கர் குறித்த பதிவிட்டு இருப்பதாவது :-

பாபாசாகேப் அவர்களை நோக்கி வீசப்பட்ட வெறுப்பையும், புறக்கணிப்பையும், வன்மத்தையும் புறம்தள்ளி எவராலும் எக்காலத்திலும் வீழ்த்த முடியாத நம் மக்களின் அடிப்படை உரிமையைப் பெற, தன் வாழ்நாளின் கடைசி நொடி வரை தன்னிடம் இருந்த ஒட்டுமொத்த ஆற்றலையும் கொண்டு சமரசமின்றி களம் கண்டு வெற்றி பெற்றதை என்றும் நினைவில் ஏந்துவோம்!

முன்னெப்போதும் இல்லாத வகையில் சமீபகாலங்களில் தொடுக்கப்படும் வன்மங்களையும், அவதூறுகளையும், பிரிவினைவாத போக்கையும் தீவிரமாக எதிர்கொள்ள, பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை ஏந்தி சமரசமின்றி களம் காண அவரின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்! ஜெய்பீம். என்று உணர்வுபூர்வமாக அம்பேத்கரின் கருத்துகளோடு தன்னுடைய கருத்துக்களையும் இணைத்து பதிவிட்டு இருக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள்.

நடிகரும் தயாரிப்பாளருமான கமலஹாசன் அவர்கள் சட்டமேதை அம்பேத்கர் குறித்து தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது :-

சட்டம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் தனக்கிருந்த பேரறிவை, சமூகச் சீர்திருத்தத்துக்கும் அனைத்து மக்களின் நலனுக்குமாகப் பயன்படுத்திய மாமனிதர் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று.

ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்காக அவர் வழங்கிய அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிப்போம். அண்ணலின் நினைவை நெஞ்சில் சுமப்போம் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Exit mobile version