Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

23 காவல் நிலையங்களில் ஆயுதங்கள் திருட்டு!

#image_title

மணிப்பூரில் 23 போலீஸ் காவல் நிலையங்களில் ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளது

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மணிப்பூர் டிஜிபி பி டவுங்கல், கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை திருப்பித் தருமாறு நாங்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். 23 போலீஸ் காவல் நிலையங்களில் ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளன.

சிசிடிவி காட்சிகள் உள்ளன, இதில் தொடர்புடையவர்களை நாங்கள் அறிவோம். ஆயுதங்களை திருப்பித் தருமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். சில நாட்கள திருப்பி தாருங்கள் , இல்லையெனில் நாங்கள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

திரும்ப வழங்கப்படாவிட்டால், ஆயுதங்களை எடுத்துச் செல்வோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் ஒரே இடத்தில் ஆயுதங்களை வைத்துவிட்டு, தங்களை அடையாளம் காட்டாமல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

அனைத்து காவல் நிலையங்களிலும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவம், சிஏபிஎஃப் மற்றும் போலீசார் இரவு முழுவதும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க பல முக்கியமான மீட்பு முகாம்கள் உருவாக்கப்பட்டன என தெரிவித்தார்.

Exit mobile version