இன்ஃப்லான்சா வைரஸ் தற்பொழுது தமிழகத்தில் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்பொழுது முக கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
தமிழகத்தில் இன்சுலன்ஸா என்ற வைரஸ் தற்பொழுது வேகமாக பரவி வருவதால் 5 வயதிற்கு குறைவான குழந்தைகள், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்ஃப்ளுடன்சா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இவர்கள் அனைவரும் வெளியில் செல்லும்பொழுது கட்டாயமாக முக கவசம் அணிதல் வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் எவ்வாறு சோசியல் டிஸ்டன்ஸ் மற்றும் முக கவசத்தை கவனமுடன் கையாண்டோமோ அதே போன்று தற்பொழுது பரவிக் கொண்டிருக்கும் இன்சுவென்ஸா வைரஸ் இடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இவை இரண்டையும் மேற்கொள்ளும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த இன்ஃப்ளூயன்சா வைரஸ் பன்றிக்காய்ச்சல் என அழைக்கப்படும் H1N1 வைரஸ் ஆகும். இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடிய நோயாக அறியப்படுகிறது. மேலும் இந்த இன்ஃப்ளுடன்சா வைரஸ் ஆள் பாதிக்கப்பட கூடியவர்களுக்கு அதிக காய்ச்சல், ஒழுகும் மூக்கு, தொண்டை வலி, தசை வலி, தலைவலி, இருமல், சோர்வாக உணர்தல், தும்மல் போன்றவை அறிகுறிகளாக தோன்றும்.