வானிலை: இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேலும் டெல்டா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை மையம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
இது அடுத்த இரண்டு தினங்களில் தமிழக இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அப்போது அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
கன மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை. அதுமட்டும் அல்லாமல் இன்றுமுதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.