Chennai: இன்று சென்னை வானிலை மையம் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று வானிலை நிலவரம் படி வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது. இன்று கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மேலும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் என சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதற்கு முக்கிய காரணம் விரைவில் காற்றுழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவுக்குள் உருவாக அதிகம் வாய்ப்புள்ளது என அறிவித்து இருக்கிறது. இதனால் இன்று இரவில் இருந்து ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி மேலும் நாளை தமிழ்நாட்டில் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் மிதமான மழை,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் தமிழக கடலோர பகுதிகளான மன்னார் வளைகுடா, அதனையொட்டிய குமரிக்கடல், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளைக்கு சூறாவளி உள்ளதால் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.