Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வானிலை: நீலகிரி, கொடைக்கானல் மாவட்டத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்பு!!

Weather: Chance of frost in Nilgiris, Kodaikanal district!!

Weather: Chance of frost in Nilgiris, Kodaikanal district!!

சென்னை: தமிழகத்தில் இன்று இரவு மற்றும் நாளை காலை ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதற்க்கு காரணம் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக உள்ளத்தால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய மாவட்டத்தில் இரவு நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்ததாக தமிழகம் மற்றும் புதுவையில் நாளை முதல் வரும் 08/01/2025  வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் ஒரு சில பகுதிகளில் காலை வேளையில் அதிக பனிமூட்டம் காணப்படும். அதனை அடுத்து 24 மணி நேரத்தில் வானம் மிகுந்த மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வைப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத்து.

Exit mobile version