இந்த மாதம் வெயில் எப்படி இருக்கும்? 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதெர்மேன்!

0
276
weatherman report may 2024

உலகம் முழுவதும் கால நிலை மாற்றத்தால் கடுமையான வெப்பம், கடுமையான மழை, கடுமையான புயல் என்று மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.

இந்த நிலைக்கு காரணம் மக்கள்தான் என்றாலும் இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசரக் கட்டத்தில் உலக நாடுகள் உள்ளது. இதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் கைகோர்த்து செய்தால் மட்டுமே வருங்காலங்களில் நிலைமையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்று சூழ்நிலை ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில் தமிழகம் மற்றும் இந்தியாவில் உச்சபட்ச வெப்பநிலை ஏப்ரல் மாதம் முதலே தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு விட மிக மோசமான ஒரு வெப்ப அலை ஏப்ரல் மாதமே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வீசி வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் நிலையை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்த நிலை மேலும் ஐந்து நாட்களுக்கு மோசமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும், சென்னை வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

melum, மழைக்காக மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம், தற்போது வெப்ப அலைக்காகவும் மஞ்சள், ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.

weatherman report may
weatherman report may 2024

இந்நிலையில், நடப்பு மே மாதத்தில் தமிழகத்தில் வெப்ப அளவு எந்த நிலையில் இருக்கும்? மேலும் அதிகரிக்குமா? என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் வானிலை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த அறிவிப்பில், எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இன்று நுங்கம்பாக்கத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

மீனம்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாவதற்கான சாத்தியம் மிக குறைவு தான். முன்கூட்டியே சென்னையில் பலத்த கடல் காற்று வீச வாய்ப்புள்ளது. காற்றில் வெப்பநிலை அதிகமாக உணர முடியும்.

தமிழகத்தின் உள்புற பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை. வேலூர், கரூர், திருச்சி, சேலம், ஈரோடு மாவட்ட பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது அதிகாரப்போர்வை வானிலை அறிவிப்பு கிடையாது. வானிலை குறித்த அதிகாரப்பூர் செய்திகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திகளை காணவும்.