வெப் சீரீசில் கலக்க வரும் முன்னனி இயக்குனர்

0
137
வெப் சீரீசில் கலக்க வரும் முன்னனி இயக்குனர்

வெப் சீரீசில் கலக்க வரும் முன்னனி இயக்குனர்

சமீபகாலமாக மக்கள் திரை அரங்கத்திற்கு சென்று படம் பார்க்கும் சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் செல் ஃபோன் மற்றும் இணையதளம் மட்டுமே. அந்த வரிசையில் இப்போது வெப் சீரிஸ்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன.

“கேம் ஆஃப் த்ரான்ஸ்” போன்ற பல ஆங்கில தொடர்களுக்கு இந்திய மக்களிடையே பெ‌ரிய அளவிலான வரவேற்பு இருந்தது. அதன் தொடர்ச்சியாக ஹிந்தி மற்றும் பல தென்னிந்திய மொழியில் வெப் சீரிஸ் வர தொடங்கியது. அமேசான், நெட்ஃபலிக்ஸ், ஜீ 5 போன்ற நிறுவனங்கள் பெரிய அளவிலான பொருட்செலவில் வெப் சீரிஸ்களை இயக்க தொடங்கிண.

அந்த வரிசையில் தற்போது காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய கௌதம் மேனனும் இணைந்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் வெளிவர உள்ளது. தற்போது குவீன் (Queen) எனும் வெப் சீரிஸ் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிறது. MX நிறுவனத்துடன் இணைந்து ஒன்றாக என்டர்டைன்மென்ட் தயாரிக்கிறது.

இளம் வயது நடிகை, இளம் வயது முதல்அமைச்சர் ஆகிய பெருமைகளை எல்லாம் வைத்து இயக்கி வருகிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இதன் டீசர் ( டிசம்பர் 5 ) ஜெயலலிதா நினைவு நாளான நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார்.

முன்னதாக இயக்குனர் விஜய் இயக்ககத்தில் கங்கனா நடித்த தலைவி படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பையும் சர்ச்சைக்குரிய கருத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.