காவல்துறையில் களையெடுப்பு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி

0
185
#image_title

காவல்துறையில் களையெடுப்பு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. தினமும் ஒவ்வொரு துறைவாரியாக அந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர்.

நேற்று காவல்துறை மானிய கோரிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இத்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் உறுப்பினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

இதனிடையே கடந்த வருடம் அதிமுக அலுவலகம் சூயையாடப்பட்டது குறித்தும், தமிழகத்தில் கஞ்சா நடமாட்டத்தை அரசு குறைக்கவில்லை எனவும் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர், கட்சி அலுவலகத்திற்கு உள்ளே நடந்த சம்பவத்திற்கு காவல் துறை எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அது உங்கள் பிரச்சினை மேலும் நடைபெற்ற பிரச்சினை குறித்து காவல் துறை விசாரணை முறையாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் போதை பொருட்களை அடியோடு ஒழித்து இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம். அதிமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் இரண்டு மடங்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், காவல்துறையில் சில கருப்பு ஆடுகள் உள்ளது இதை களையெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.