Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நல்ல வாய்ப்பை இழந்து தேம்பி தேம்பி அழுத நடிகை ஜோதிகா!

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின், குழந்தைகளை வளர்பதற்காக திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா.தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அது மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்வதற்கு முன், திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த போது, உலக நாயகன் கமல் ஹாசனின் பட வாய்ப்பை இழந்ததால் தேம்பி தேம்பி அழுததாக கூறப்படுகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு, கமல்ஹாசன், சினேகா, மாளவிகா, பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வெளியான திரைப்படம் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். இந்தப்படம் நல்ல நகைச்சுவையுடன் இருந்ததனால் பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவைத்தான் அணுகினாராம் அப்படத்தின் இயக்குனர் சரண்.ஆனால் அப்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்ததால், இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
பின்னர் சினேகா இந்த படத்தில் நடித்தார். படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதற்காக ஜோதிகா ஒருமுறை சினேகாவை சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இப்படி ஒரு கமெர்சியல் ஹிட் படத்தை மிஸ் செய்ததால் ஒரு முறை தேம்பி தேம்பி அழுதுள்ளாராம். இவ்வாறு அப்படத்தை நழுவ விட்டதால் வருத்தப்பட்டுள்ளார்.
இந்த படத்தில் உலக நாயகன் கமலுடன் நடிக்க முடியாமல் போனாலும் ஜோதிகா கமலுடன் தெனாலி, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் ஜோதிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version