இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் நிச்சயம் உதவியாக இருக்கும்.நீங்கள் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு உடல் எடையை அதிகரிக்கலாம்.
1)தேங்காய் பால்
ஒரு மூடி தேங்காயை கீற்று போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.அல்லது தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள்.இதை மிக்சர் ஜாரில் கொட்டி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.தேங்காய் நன்றாக அரைபட்டு பாலாக வரும் அளவிற்கு அரைக்க வேண்டும்.இந்த தேங்காய் பாலை கிண்ணத்திற்கு வடிகட்டி சிறிதளவு வெல்லம் சேர்த்து பருகினால் உடல் எடை அதிகரிக்கும்.
மேலும் தேங்காய் பாலில் சுக்குத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
2)செவ்வாழைப்பழம்
ஒரு செவ்வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை தேனில் ஊறவைத்து மதிய நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
3)எள்
கருப்பு எள்ளை வறுத்து பொடித்து வெல்லத் தூள் சேர்த்து உருண்டை பிடித்து உட்கொண்டு வந்தால் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.
4)பால்
ஒரு செவ்வாழை பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அடுத்து ஐந்து உலர் திராட்சை,இரண்டு விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பழம் மற்றும் முந்திரி ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து செவ்வாழை பழத் துண்டுகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஒரு கிளாஸ் காய்ச்சி ஆறவைத்த பாலை அதில் ஊற்றி நன்றாக அரைத்து காலை நேரத்தில் பருகி வந்தால் உடல் எடை கூடும்.
5)பால் தேன்
தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் சூடான பாலில் தேன் கலந்து பருகி வந்தால் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.
6)உளுந்து உணவுகள்
கருப்பு அல்லது வெள்ளை உளுந்தில் களி,பலகாரம்,கஞ்சி,லட்டு போன்ற உணவுகள் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை இயற்கையான முறையில் அதிகரிக்கும்.