தென் இந்தியர்கள் அரிசி உணவையும் வட இந்தியர்கள் கோதுமை உணவுகளையும் விரும்பி உட்கொள்கின்றனர்.அரிசியில் சாதம்,பிரியாணி,இடியப்பம் என்று வெரைட்டி உணவுகள் தயாரிக்கப்பட்டு உண்ணப்படுகிறது.அதேபோல் கோதுமையில் சப்பாத்தி,பூரி,பரோட்டா போன்ற உணவுகள் தயாரித்து ருசி பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அரிசி சாதம் மற்றும் சப்பாத்தியை பெரும்பாலான மக்கள் விரும்பி உண்கின்றனர்.இந்த இரண்டு உணவுகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.சாதம் மற்றும் சப்பாத்தியில் கலோரிகள் நிறைந்துள்ளது.
சப்பாத்தியில் நார்ச்சத்து,புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.வெள்ளை அரிசியை விட பிரவுன் அரிசியில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.சர்க்கரை நோய் உள்ளவர்கள் பிரவுன் அரிசி உணவுகளை உட்கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சப்பாத்தியை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.சப்பாத்தியில் உள்ள நார்ச்சத்துக்கள் அதிக நேரம் நிறைவாக வைத்திருக்கும்.சப்பாத்தி உணவுகள் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
அரிசி உணவுகள் எளிதில் செரிமானமாகக் கூடியவை.இதில் குறைவான நார்ச்சத்து நிறைந்திருப்பதால் எளிதில் செரிமானமாகி அடிக்கடி பசி உணர்வு உண்டாகும்.எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சப்பாத்தியை தேர்வு செய்யலாம்.
வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பு இருபவர்கள் அரிசி உணவை உட்கொள்ளலாம்.செரிமானப் பிரச்சனை,வயிறுக் கோளாறு,பசியின்மை போன்ற பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் அரிசி உணவுகளை உட்கொள்ளலாம்.எனவே சுகர் இருப்பவர்கள் பிரவுன் ரைஸ் சாப்பிடுங்கள்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சப்பாத்தியை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் அரிசி சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.