Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடைசி நேரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்த புதிய கட்சி!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதே போல வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் மிக குறைந்த காலமே இருக்கும் காரணத்தால், தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாம் மிகத்தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும் தேர்தல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பிக்க இருக்கிறது. ஆகவே வேட்பாளர் பட்டியலை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் காங்கிரஸ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கிறார்கள் இந்த நிலையில், கமல்ஹாசன் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற மூன்றாவது புதிய கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.

திமுக சார்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடும் முடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த தொகுதி பங்கீட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், ஆகிய கட்சிகளுக்கு தல 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மூன்று இடங்களை பெற்று இருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெல்ஃபேர் கட்சி ஆதரவு தெரிவித்து இருக்கிறது. கூட்டணி இறுதி செய்யப்பட்ட கடைசி சமயத்தில் அந்த கட்சி திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது என சொல்லப்படுகிறது

Exit mobile version