Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களா நீங்கள்..?? ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று தெரியுமா..??

ஜோதிடத்தின் படி ஒருவரின் பிறந்த தேதி மற்றும் நேரத்தை வைத்து, அவர்களுடைய ஆளுமை தன்மையை பற்றி அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு இருக்கையில் ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களின் ஆளுமை தன்மை எவ்வாறு இருக்கும்? அவர்கள் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டிருப்பார்கள்? என்பது குறித்து தற்போது காண்போம்.

ஜோதிடத்தின் படி ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்களின் ராசியின் அதிபதியாக சூரிய பகவான் திகழ்கிறார். ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் அமைதியான சுபாவம் கொண்டவர்கள். இவர்கள் என்ன ஒரு செயலை அல்லது கருத்தை மற்றவர்களிடம் கூறினாலும், அதன் ஆழத்தை புரிந்து கொண்டு அதாவது அதன் உண்மை தன்மையை அறிந்து கொண்ட பின்னரே மற்றவர்களிடம் தெரிவிப்பர்.

ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே அதிகமான உணர்திறன் கொண்டவர்கள். எனவே அவர்கள் ஏதேனும் ஒன்றைப் பற்றி மோசமான உணர்வை கொண்டால், அதனை மறவாமல் அப்படியே மனதில் வைத்துக் கொள்வார்கள். மேலும் அவர்கள் அதனை குறித்து பல நாட்களுக்கு மேல் யோசித்துக் கொண்டேயும் இருப்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் வசீகரமான ஆளுமை பண்பை கொண்டவர்கள். இதனால் இவர்கள் மற்றவர்களை எளிதாக இருக்கவும் செய்வார்கள். இவர்களின் பேச்சு, நடை, பாவனை ஆகிய அனைத்தும் வசீகரமாக இருக்கும். இதனால் மற்றவர்கள் இவர்களுடன் விரைவில் நட்புக் கொள்வார்கள்.

இவர்கள் மற்றவர்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் என்று, புதிது புதிதான முறைகளை தேர்ந்தெடுத்து செயல்படுவார்கள். இந்த கிழமையில் பிறந்தவர்கள் ஒரு செயலில் ஈடுபட்டால் அதில் முழு ஆர்வத்துடனும், கவனத்துடனும் செயல்பட்டு விரைவில் அந்த வேலையை செய்து முடிப்பார்கள்.

மேலும் ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் தங்களின் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நல்ல உறவை கொண்டிருப்பார்கள். அதாவது எந்த உறவாக இருந்தாலும் அவர்களிடம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பார்கள்.

Exit mobile version