அதில் முதலாவது திரைப்படம் வணங்கான் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அருண் விஜய் நடித்து, இயக்குனர் பாலாவின் கூட்டணியில் உருவாகிஉள்ளது. மேலும் இந்த படம் ஜனவரி 10-ம் தேதி திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் சரண் அடித்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பாண் இந்தியா படமாக தயாரித்துள்ளனர். இந்த படம் கேம் சேஞ்சர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் ராம் சரண் RRR படம் முடித்து 3 ஆண்டு பிறகு இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
கிருத்திகா உதயநிதி தயாரிப்பில் வெளியான வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களுக்கு பிறகு காதலிக்க நேரமில்லை என்ற படம் எடுத்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த படம் ஜனவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகர் ஷான் நிகாம் தமிழில் அறிமுகமாகி உள்ள இந்த திரைப்படம் மெட்ராஸ்காரன். இந்த படம் பொங்கலை முன்னிட்டு 14-ம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கலையரசன், கருணாஸ், பிக்பாஸ் ஜஸ்வர்யா தத்தா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
கடைசியாக ஒரு சின்ன பட்ஜெட்டில் நடிகர் சிபிராஜ் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் Ten Hours. இந்த திரைப்படம் கிரைம் த்ரில்லராக திரைக்கு வருகிறது.