Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்ன ஆரியா இப்டி மாறிடாரு!! இணையதளத்தை கலக்கும் சார்பட்டா பரம்பரை!!

What a change Aria Ipti !! The Charbatta lineage that mixes the web !!

What a change Aria Ipti !! The Charbatta lineage that mixes the web !!

என்ன ஆரியா இப்டி மாறிடாரு!! இணையதளத்தை கலக்கும் சார்பட்டா பரம்பரை!!

தமிழ் சினிமாவில் 5௦ குக்கு மேல் படங்களை நடித்து ரசிகர்களால் சாக்கோ பாய் என்று ஆரியா  அழைக்கபடுகிறார்.  மேலும் சமிபத்தில் கஜினிகாந்த், காப்பான் மற்றும் டெடி திரைப்படத்தில்  நடித்து கலக்கி மக்கள் மனதை வென்றார். இதைத்தொடர்ந்து ஆரியா தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை எனும் படம் ஒன்றில் நடித்துள்ளார். அப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் ஆர்யாவின் 30வது படமாக சார்பட்டா பரம்பரை படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்காக ஆர்யா பல்வேறு கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் பாக்சிங் கற்றுக்கொண்டு நடித்ததாக தெரிவித்துள்ளனர். இந்தப்படத்தில் வடசென்னை வாலிபர் மற்றும் பாஸ்கராக நடித்துள்ளார் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. மேலும் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என கூறப்பட்டது போலவே இன்று வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து வெளியாகும் படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியாகி வரும் நிலையில் இந்த படத்தை கூட அமேசான் தளத்தில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. ஜூலை 22-ஆம் தேதி அமேசான் அடித்தளத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அப்படத்தின் ட்ரைலர் வீடியோ ரிலீசாகி இணையதளத்தில் கலக்கி வருகிறது. முன்னர் கூறியிருந்தது போலவே இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தான் வெளியாக உள்ளது. இதன் ட்ரைலர் வீடியோவை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்த வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ஆர்யா வேறொரு முகமாக தோற்றமளிப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு சிறு நாட்களிலேயே இவர் முழுவதுமாக தோற்றத்தை மாற்றி இருப்பது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version