Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ப்பா என்னா லுக்! பிக் பாஸ் திரை பிரபலம்!

ப்பா என்னா லுக்! பிக் பாஸ் திரை பிரபலம்!

பிக் பாஸ் இரண்டாம் பாகத்தில் போட்டியாளராக கலந்துக் கொண்டவர் தான் யாஷிகா ஆனந்த்.இவர் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்து கொள்ளும் முன் கவலை வேண்டாம் என்னும் படத்தில் ஸ்விம்மிங் ஆசிரியர் ரோலில் கவர்ச்சியாக வந்தார்.

இதைத்தொடர்ந்து துருவங்கள் பதினாறு படத்திலும் நடித்துள்ளார்.அனைத்து இளைஞர்களையும் கவரும் விதமாக இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் படத்திலும் நடித்துள்ளார்.

இதற்கு அடுத்ததாக தான் அவர் பிக் பாஸ் சென்றார்.அங்கு மஹத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டு அவரின் காதல் வலையில் விழுந்தார்.இருப்பினும் மஹத் வேறு ஒரு பெண்ணை வெளியில் காதலித்து வருவதால் இது அரசால் புரசலாக பேச்சாக மட்டுமே இருந்தது.

இதனையடுத்து யூ ட்யூப் மூலம் ஒரு முறை லைவ் வந்த போது கூட இருந்த ஆண் தோழர் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த சம்பவம் மக்களிடம் முகம் சுளிக்க வைத்தது.அதனடுத்து சாம்பி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் மக்கள் அனைவரையும் கவர்ந்தார்.

அதனையடுத்து இப்போது சல்பர் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.அதில் அவர் காவலர் உடையில் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு செம ஸ்ட்ரிக் ஆபிசர் போன்ற வேடத்தில் போஸ் கொடுத்துள்ளார்.மற்ற படங்களில் கிளாமரில் நடித்தது போல இந்த படம் இருக்காது என்பது இந்த போஸ்டரை பார்க்கும் போதே தெரிகிறது.

Exit mobile version