அதிக புரதம் நிறைந்த உணவுப் பொருள் முட்டை.இதில் ஆம்லெட்,வறுவல்,சில்லி,ஆப் ஆயில்,குழம்பு,கிரேவி,முட்டை தோசை என்று பல ருசியான உணவுகள் செய்யப்படுகிறது.முட்டையின் முழு சத்தும் கிடைக்க அதை வேகவைத்து சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
முட்டையில் புரதம்,வைட்டமின்கள்,செலினியம்,துத்தநாகம்,இரும்பு,தாமிரம் மற்றும் தாதுக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
முட்டை நன்மைகள்:
1)முட்டையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
2)சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக முட்டையை வேகவைத்து சாப்பிடலாம்.முட்டையில் இருக்கின்ற புரதம் உடல் எடையை குறைக்க செய்கிறது.
3)முட்டை சாப்பிடுவதால் மூளை செயல்திறன் அதிகரிக்கிறது.முட்டையில் வைட்டமின் டி சத்து நிறைந்து காணப்படுகிறது.வேகவைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும்.
உடலுக்கு இத்தனை நன்மைகளை கொடுக்கும் முட்டையை எவ்வளவு நேரம் வேகவைக்க வேண்டும் என்பது குறித்து பலரும் அறியாமல் இருக்கின்றனர்.சிலர் முட்டை உடைந்து வராமல் இருக்க ட்ரிக்ஸ் யூஸ் பண்ணுகின்றனர்.
முட்டை வேகவைக்க ஆகும் நேரம் 10 நிமிடங்கள்தான்.பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முட்டை வைத்த பிறகு சிறிது கல் உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கலாம்.அதேபோல் கல் உப்பிற்கு பதில் வெங்காயத் தோல் சேர்த்து வேக வைத்தால் முட்டை வெடிக்காமல்,விரிசல் இல்லாமல் அழகாக வெந்துவரும்.சிலர் முட்டை வேக வைக்கும் தண்ணீரில் சிறிது எண்ணெய் சேர்க்கின்றனர்.
இதுபோன்ற ட்ரிக்ஸ் பின்பற்றினால் முட்டை உடையாமல் வெந்துவரும்.சிலர் முட்டையை வேகமாக பாத்திரத்தில் வைக்கின்றனர்.இதனால் அவை விரிசல் ஏற்பட்டு மஞ்சள் மற்றும் வெள்ளைக்கரு வெளியில் வர அதிக வாய்ப்பிருக்கிறது.அதேபோல் முட்டையை குறைவான தீயில் வேகவைக்க வேண்டும்.
கடையில் முட்டை வாங்கும் பொழுது அதை குலுக்கி பார்க்க வேண்டும்.முட்டை கரு சத்தம் கேட்டால் அவை பிரஸ் முட்டை என்று அர்த்தம்.விரிசல் உள்ள முட்டை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் முட்டை மீது கருப்பாக இருந்தால் அதை வாங்கக் கூடாது.
கடையில் வாங்கி வந்த முட்டையை தண்ணீரில் போட்டு அவை மேலே மிதக்கிறதா அல்லது அடியில் தங்குகிறதா என்று பரிசோதிக்க வேண்டும்.முட்டை மேலே மிதந்தால் அவை பழைய முட்டை என்று அர்த்தம்.