எந்த தமிழ் படங்கள் மக்களுக்கு தவறான விசயங்களை காட்டுகிறது ?

0
222
#image_title

படங்கள் என்பது இன்றைக்கு பொழுது போக்காக இருந்தாலும் இப்பொழுது படம் பார்க்கும் அனைவருமே படத்தில் கருத்துக்கள் இருக்க வேண்டும் என்றும், அந்த கருத்துக்கள் நம்பும்படியும் இருக்க வேண்டும். மக்கள் நன்கு உஷாராக ஆகிவிட்டனர். ஆனால் அப்படி மக்களுக்கு புறம்பாக எடுத்து வாழ்க்கைக்கு வழிமுறை தவறி புறம்பாக எடுத்து வெற்றி பெற்ற படங்களும் உண்டு .ஆனால் இது தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என்று தான் இன்றைய பேசும் பொருள்.

 

பாபநாசம்(2015)

 

ஒரு கொலையை செய்து விட்டு அதிலிருந்து தப்பிப்பதற்காக எப்படி தடயங்களை அழிக்கலாம்.காவல்துறை விசாரணையை எப்படி சமாளிக்கலாம். தன் குடும்பத்தை காப்பாற்றினார் என்பது உண்மைதான் ஆனால் இது தவறான முன்னுதாரணம் தானே.

 

பீட்ஸா(2012)

 

விசுவாசமாய் இருக்க வேண்டிய முதலாளியிடம் நல்லவன் போல நடித்து நம்ப வைத்து ஏமாற்றி அவரிடம் இருந்து பணத்தையோ விலையுர்ந்த பொருளையோ அபேஸ் பண்ணுவது எப்படி?

 

நூறாவது நாள்(1984)

 

கொலை செய்து விட்டு வெளியே தெரியாமல் வீட்டுக்குள்ளேயே பிணத்தை மறைப்பது எப்படி?

 

புதிய பாதை: 1989

 

ஒரு குற்றவாளியை, தன்னை சீரழித்த ஒருவனை திருத்தி நல்வழிப்படுத்துவது ஒரு கற்பழிக்கப்பட்ட பெண்ணின் இலக்காக சித்திரக்கப்பட்டிருப்பது மிகவும் பிற்போக்கானது.

 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்:

 

நான் வெற்றி படமாக அமைந்தாலும் யாரிடம் பணம் அதிகமாக இருக்கிறதோ, அவரை திட்டமிட்டு அதை திருடலாம் என்று இரண்டு திருடிகளும், அவர்களுடன் சேர்ந்து கொள்ளும் ஹீரோக்களும் இந்த செயலை செய்வது தவறானது.

 

வரலாறு:

 

இந்த படத்தில் அஜித் , தன்னை ஒரு பெண் நிராகரித்தால் என்பதற்காக அந்த பெண்ணை கற்பழிப்பார். இது தவறான ஒரு செயலை எடுத்துக் காட்டுகிறது. ஒரு பெண்,நீ ஆண் இல்லை என்று சொன்னால் அது உறவுக்காக மட்டும்தான் இருக்கும் என்று எண்ணி இந்த படம் வெளிவந்தது இளைஞர்களுக்கு தப்பான வழிகாட்டுதல்.

 

உங்களுக்கு,  எந்த படம் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என்று கருதுகிறீர்கள்?  உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.