சட்டமன்றப் பொதுத் தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய வழிமுறைகள்?கொரோனா காலத்தில் பாதுகாப்பாக தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் நெறிமுறைகளை வகுத்துள்ளது!
கொரோனா பரவுதலால் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு,கேரளா, மேற்கு,வங்காளம் அசாம், மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
சட்டமன்ற பொதுத்தேர்தல் பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான ஆலோசனைகளை மாநில தேர்தல் ஆணையமிடம் மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடம் இந்திய தேர்தல் ஆணையம் கேட்டு,கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் இவர்களோடு கருத்தை வைத்து ஆலோசனை செய்தது.இவர்கள் கருத்துக்களின் அடிப்படையில்,இந்திய தேர்தல் ஆணையமானது வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலை எவ்வாறு பாதுகாப்பாக நடத்தலாம் என்று சில வழி முறைகளை வகுத்துள்ளது.
இந்த வழிமுறைகள் பின்வருமாறு:
1.தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் ஒவ்வொருவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
2.தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் சோதனை நடத்தப்படும்.
3. தேர்தல் பணி நடைபெறும் இடங்களில் வெப்ப பரிசோதனை கருவிகள் மற்றும் கிருமிநாசினி,சோப்பு, சனிடைசர்,போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.
4. வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூய்மைப்படுத்திய பிறகு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
5. கொரோனா காலத்தின் கூட்டம் கூடாமல் சமூக இடைவெளி
பின்பற்றுகின்றனவா என்பதனை கண்காணிக்க மாநில,மாவட்ட மற்றும் சட்டமன்ற தொகுதி என அனைத்துப் பகுதிகளிலும் அதிகாரிகள் நியமிக்கப்படும்.
5.தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்டாயம் தனிமனித இடைவெளியை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.
6.மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் தனது வாக்கினை அளிக்க அனுமதி அளித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
7. முக்கியமான பணிகளில் உள்ள பணியாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கவும் அனுமதி அளித்துள்ளது.
8. கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளும் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.
9. வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்து தரப்படும்.
10. வாக்களிக்கும் போது வாக்காளப் பெருமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து தனது வாக்குகளை பதிவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.