உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்னவெல்லாம் ஆகும் தெரியுமா ?

0
99

பொதுவாக ஒரு மனித உடல் 55% முதல் 78% வரை நீரால் ஆனது, மூளை 73% நீரால் ஆனது. மூளை மட்டுமின்றி இதயம், எலும்புகள், தசைகள், தோல் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற அனைத்து முக்கியமான உறுப்புகளும் தண்ணீரால் ஆனவை தான். அதனால் நாம் தின்தோறும் போதுமான அளவு தண்ணீரை அருந்த வேண்டியது அவசியம் ஆகும், அதனால் உங்கள் உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட பெரியவர்கள் தினமும் குறைந்தது 3.7 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். எந்த காலநிலையாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் நீங்கள் இந்த அளவு தண்ணீரை அருந்த வேண்டும் இல்லாவிட்டால் உங்கள் உடல் சீக்கிரமே டீ-ஹைட்ரேட் ஆகிவிடும்.

உங்கள் உடல் நீரேற்றமாகவும், ஆரோக்கியாகவும் இருக்க வேண்டுமானால் நீங்கள் அவசியம் தண்ணீர் அருந்த வேண்டும். உங்கள் உடலில், குறிப்பாக செல்கள் மற்றும் இரத்த நாளங்களில் போதுமான நீர் இல்லாமல் போனால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். சரியான அளவில் நீங்கள் தண்ணீரை குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது, மூட்டுகளை ஆரோக்கியமாக வைக்கிறது, உமிழ்நீரை உருவாக்குகிறது, உடலின் இரசாயனங்களை சமன் செய்கிறது, அனைத்து உடல் உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது, உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது, இதுபோன்ற பல பயன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் அடர் மஞ்சள் நிற சிறுநீர் வெளியேற்றம், நுரை மற்றும் துர்நாற்றம் கொண்ட சிறுநீர் வெளியேற்றம், சோர்வடைதல், எலும்புகள் பலவீனமடைதல், தலைவலி, சரியாக நடக்க முடியாது, குழி விழுந்த கண்கள், வாய், தோல் மற்றும் நாக்கு வறண்டு போதல், மந்தமான மூளை போன்ற நிலைகள் ஏற்படும்.