Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மார்கழி மாதம் என்ன செய்யலாம்..? எவையெல்லாம் செய்யக் கூடாது..?

#image_title

மார்கழி மாதம் என்ன செய்யலாம்..? எவையெல்லாம் செய்யக் கூடாது..?

தமிழ் மாதங்களில் 9 மாதமாக இருக்கும் மார்கழி தெய்வீகம் நிறைந்த மாதமாக இருக்கிறது. இந்த மாதம் வழிபாட்டிற்கு உகந்த மாதம் ஆகும். ஆனால் இந்த மார்கழி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது என்று சில சாஸ்திரங்கள் இருக்கிறது. இவற்றை கட்டாயம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை:-

1)காலையில் எழுந்து திருப்பாவை பாடுவது அல்லது திருப்பாவை கேட்பது நல்லது.

2)இந்த மாதத்தில் திருமணத்திற்கு வரன் பார்க்கலாம். ஜாதக பரிமாற்றம், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு போன்ற சுப காரியங்களை செய்யலாம்.

3)நிலம், மனை வாங்க இந்த மாதம் உகந்த மாதமாக இருக்கின்றது.

4)அதிகாலையில் எழுந்து கோலம் போட உகந்த மாதம்.

5)புது ஆடைகள் வாங்கலாம். பயணம் மேற்கொள்ளலாம்.

மார்கழி மாதத்தில் செய்யக் கூடாதவை:-

1)மார்கழி மாதத்தில் விதை விதைத்தல் செய்யக் கூடாது.

2)திருமணம் செய்யக் கூடாது. அதேபோல் நிச்சயதார்த்தம், மொட்டை அடித்தல், குழந்தைக்கு பெயர் சூட்டல், காது குத்தல், பத்திரப்பதிவு, வாகனப் பதிவு செய்யக் கூடாது.

3)இந்த மாதத்தில் சூரியன் உதயத்திற்கு பின் தூங்கக் கூடாது.

4)மார்கழி மாதத்தில் புதுமனை குடி புகுதல், பால் காய்ச்சல், வாடகை வீடு குடியேறுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.

Exit mobile version