Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எந்த நாளில் என்னவெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது! பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?  பயனுள்ள ஆன்மீகத் தகவல்!

#image_title

எந்த நாளில் என்னவெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது! பிறந்த கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?  பயனுள்ள ஆன்மீகத் தகவல்! 

பொதுவாக எல்லாருக்கும் ஆன்மீகத்தை பொறுத்தவரை சிலவற்றை செய்யலாமா? செய்யக்கூடாதா? என்ற சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கும். இதோ அதில் சில சந்தேகங்களுக்கான விடைகள்.

** சிலர் பிறந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என்று கூறுவர். ஆனால் அது தவறு. பிறந்த நட்சத்திரத்தில் மட்டுமே எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. கிழமை பார்க்க வேண்டாம். தீபாவளி அன்று ஜென்ம நட்சத்திரம் வந்தால் சும்மாவே இருந்து விடாதீர்கள். தீபாவளி மட்டும் விதிவிலக்கு. எனவே அன்றி தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

**  தங்க நகை வாங்குவதாக இருந்தால் புதன்கிழமை குளிகை நேரத்தில் வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் பொன், பொருள் எப்போதும் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும்.

** அதேபோல் புதன்கிழமை பால் சேர்த்து எந்த ஒரு பொருளையும் சமைக்காமல் இருப்பது மிகவும் நல்லது. அதேபோல் இந்த கிழமையில் பச்சை வாழைப்பழத்தை வீட்டிற்கு வாங்கி வருவது மிகவும் சிறப்பு.

** நமது முன்னோர் வழிபாட்டுக்கு மட்டுமே அமாவாசை உரியது. அதனால் அந்த நாட்களில் சுப விஷயங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. அமாவாசை, பிரதமை நாட்களை விடுத்து, துவிதியை திதியில் இருந்தே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

** ஆயுதங்கள் மற்றும் கூர்மையான பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்க கூடாது. அதேபோல் சமையலுக்கு பயன்படும் மாவு போன்ற பொருட்களை இந்த நாளில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

** வெள்ளிக்கிழமைகளில் மசாலா பொருட்கள் வாங்குவது மற்றும் அரைப்பதை தவிர்க்க வேண்டும்.

** செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிறருக்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. செவ்வாய் முருகனுக்கும் வெள்ளி லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இங்கே இரண்டு தெய்வங்களும் நமது வீட்டில் செல்வ வளத்தை பெருக்குவதற்கும் அவர்கள் நம் வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள் புரிகின்றனர்.

இதன் காரணமாகத்தான் அன்றைய தினத்தில் பணப்பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதையும், மற்றவர்களுக்கு கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது என்கின்றார்கள்.

 

 

 

Exit mobile version