Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோவில்களில் தரக்கூடிய பூக்கள் மற்றும் மாலைகளை என்ன செய்யலாம்..?!

பொதுவாக கோவில்களில் தரக்கூடிய பிரசாதம் என்பது மிகவும் சிறப்பிற்குரிய ஒன்று. தேவேந்திரன் முதற்கொண்டு பல பேருக்கும் பலசாபங்கள் வருவதற்கு காரணமாக இருந்தது இந்த தெய்வீக பிரசாதத்தை அலட்சியப்படுத்தியது தான். கோவில்களில் அடித்து பிடித்து கூட்டங்களுக்கு இடையே சென்று தெய்வீக பிரசாதமான பூக்களை வாங்கி வருவோம். அவ்வாறு வாங்கிய பூக்களை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு, அதன் பிறகு அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்து விடுவோம். அவ்வாறு செய்வது மிகவும் தவறு.

உதிரிப் பூக்களாக இருந்தாலும், சாமிக்கு சூட்டிய பூவாக இருந்தாலும், மாலையாக இருந்தாலும் அதனை சாமிக்கு ஒரு முறை சூட்டிய பிறகு அதனை மீண்டும் சூட்ட கூடாது. சாமியிடம் இருந்து வாங்கிய பூக்கள் உதிரிப் பூக்களாக இருந்தால் அதனை அப்படியே கொண்டு வந்து நமது பூஜை அறையில் ஒரு தாம்பூலத்தில் வைத்து விடலாம். நிறைய உதிரிப் பூக்கள் இருக்கிறது என்றால் அதனை கட்டி நமது தலையில் வைத்துக் கொள்ளலாம். கட்டிய பூவாக இருந்தால் அதனையும் நமது தலையில் வைத்துக் கொள்ளலாம்.

மிகவும் நிறைய பூக்கள் உள்ளது என்றால் அதனை கோவிலிலேயே அங்கு உள்ள பக்தர்களுக்கு பகிர்ந்து கொடுத்து விடலாம். அதுவே கோவிலில் கொடுக்கக்கூடிய பூ மாலையாக இருந்தால் அதனை நமது வீட்டில் உள்ள சாமிக்கு சூட்ட கூடாது. அதற்கு பதிலாக பூஜை அறையின் நிலை வாசலில் அல்லது வீட்டின் வெளியில் உள்ள நிலை வாசலில் மாட்டிக் கொள்ளலாம்.
வீட்டின் நிலை வாசலில் மாலையை மாட்ட இயலாதவர்கள் ஏதேனும் ஒரு மரத்தின் அடியில் வைத்து விட்டு வரலாம். அவ்வாறும் இல்லையென்றால் நமது வாகனங்களில் மாட்டிக் கொள்ளலாம்.

இதுபோன்ற முறைகளில் சாமி பிரசாதத்தை பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர அதனை மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது. பூக்களே இல்லாமல் கூட நமது வீட்டில் உள்ள சாமிக்கு பூஜை செய்யலாம். ஆனால் ஒருமுறை சாமிக்கு சூட்டிய பூவை மறுமுறை கண்டிப்பாக சூட்ட கூடாது.

நகைக் கடைகளில் பூக்களைப் போன்றே வெள்ளியில் இருக்கும். அதனை வாங்கி வைத்துக் கொண்டும் நமது வீட்டு பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போன்று வில்வம் இலைகளை எடுத்து வைத்து அதனையும் நமது வீட்டின் சாமிக்கு பூஜை செய்யலாம். இதனை ஒரு முறை பூஜை செய்துவிட்டு மீண்டும் எடுத்து அடுத்த பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் அந்த வில்வம் என்பது அத்தனை சிறப்பிற்குரிய ஒன்று.

Exit mobile version