Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது? ப்ரஸ்ட் கேன்சர் வந்தால் மார்பை எடுக்கணுமா?

Breast Cancer: பெண்களுக்கு மட்டும் ஏற்படக் கூடிய பொதுவான பாதிப்பு மார்பக புற்றுநோய்.மார்பு பகுதியில் வலி,சிவத்தல் அல்லது முலைக்காம்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

தற்பொழுது பெரும்பாலான பெண்கள் இந்த மார்பக புற்றுநோய் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.சிலருக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் புற்றுநோய் செல்கள் உடலில் மற்ற இடங்களில் பரவி வளரத் தொடங்கிறது.

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மார்பில் உள்ள புற்றுநோய் கட்டிகளை மட்டும் எளிதில் அகற்றிவிடலாம்.இதுவே கால தாமதம் ஆனால் மார்பகத்தையே அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்.எனவே மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் இருக்க வேண்டியது அவசியம்.

நுரையீரல் புற்றுநோய் புகைப்பிடிப்பதால் ஏற்படுகிறது.அதேபோல் வாய் புற்றுநோய் புகையிலை பழக்கத்தால் ஏற்படுகிறது என்று சொல்ல முடியும்.ஆனால் மார்பக புற்றுநோய் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது யாருக்கு இந்த பாதிப்பு வரும் என்று சொல்ல முடியாது.

ஆனால் பரம்பரைத் தன்மை மூலம் இந்த மார்பக புற்றுநோய் வர அதிக வாய்ப்பிருக்கிறது.உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த மாராப்பாக புற்றுநோய் இருந்தால் அது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வர வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மார்பக புற்றுநோய் அறிகுறிகள்:

1)மார்பக வலி
2)முலைக்காம்பில் மாற்றம்
3)அக்குள் பகுதியில் வலியற்ற கட்டி
4)மார்பு தோல் பகுதி சிவத்தல்
5)முலைக்காம்பில் இருந்து நீர் அல்லது இரத்தம் வடிதல்
6)மார்பு பகுதியை சுற்றி மென்மையாக இருத்தல்
7)மார்பகத் தோலில் குழிகள் உருவாதல்

மார்பக புற்றுநோய் வர காரணங்கள்:

1)சிறு வயதில் பூப்படையும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது.

2)30 முதல் 35 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த பாதிப்பு வரலாம்.

3)பரம்பரைத் தன்மை காரணமாக இந்த மார்பக புற்றுநோய் பாதிப்பு வரலாம்.

4)இரவு நேர பணியில் ஈடுபடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு வர வாய்ப்பிருக்கிறது.

5)காற்று மாசுபட்டால் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது.மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த பாதிப்பு வரலாம்.

6)வாழ்நாளில் கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரலாம்.

Exit mobile version