Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

PCOD மற்றும் PCOS பிரச்சனை எதனால் ஏற்படுகிறது? இதன் அறிகுறிகள் மற்றும் இதற்கான தீர்வு!!

உலகளவில் பெண்கள் சந்திக்கும் பாதிப்பாக PCOD மற்றும் PCOS உள்ளது.இவை இரண்டும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் உண்மையில் இவை இரண்டும் வெவ்வேறான பாதிப்புகளாகும்.

PCOD(பாலிசிஸ்டிக் ஓவரியன் நோய்):

இது கருப்பை சம்மந்தபட்ட நோய் பாதிப்பாகும்.கருப்பையில் நீர்கட்டிகள் இருப்பதை தான் PCOD என்று அழைக்கின்றோம்.பெரும்பாலான பெண்கள் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.

PCOD அறிகுறிகள்:

1)முடி உதிர்வு
2சருமத்தில் அதிக முடி வளர்தல்
3)உடல் எடை அதிகரித்தல்
4)முறையற்ற மாதவிடாய்
5)முகப்பருக்கள் அதிகமாதல்
6)உடல் சோர்வு
7)அதிக உதிரப்போக்கு

PCOD வர காரணங்கள்:

1)ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்
2)ஹார்மோன் மாற்றம்
3)ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறை

PCOS(பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட் ரோம்):

இந்த பாதிப்பு ஹார்மோன் சமநிலை இல்லாமல் போவதால் ஏற்படுகிறது.இந்த பாதிப்பால் கருப்பையில் நீர்கட்டிகள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

PCOS அறிகுறிகள்:

1)சீரற்ற மாதவிடாய் கோளாறு
2)உடலில் தேவையற்ற முடிகள் அதிகம் காணப்படுதல்
3)தலைமுடி இழப்பு
4)முகப்பருக்கள்
5)உடல் எடை கூடல்

PCOS வரக் காரணங்கள்:

1)மன அழுத்தம்
2)ஆரோக்கியமற்ற உணவுமுறை
3)மோசமான வாழ்க்கை முறை
4)மன உளைச்சல்
5)பதற்றம்

PCOS மற்றும் PCOD பாதிப்பு இருக்கும் பெண்களால் எளிதில் கருவுற முடியாது.இந்த பிரச்சனை இருப்பது உறுதியானால் உடனே சித்த வைத்தியத்தை பின்பற்றி பலனடையுங்கள்.தினமும் ஒரு தேக்கரண்டி ரோஜா குல்கந்தை பாலில் கலந்து பருகினால் PCOD,PCOS பிரச்சனை குணமாகும்.

மலைவேம்பாதி தைலம் பயன்படுத்தி வந்தால் இந்த பிரச்சனை குணமாகும்.அதேபோல் மலை வேம்பை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக சாப்பிட்டு வந்தால் PCOD,PCOS பாதிப்பு குணமாகும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கழற்சிக்காய் சூரணத்தை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.அசோக மரப்பட்டையை பொடித்து தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் PCOS மற்றும் PCOD குணமாகும்.அரசமர இலை கொழுந்தை அரைத்து பாலில் கலந்து குடித்தால் PCOS மற்றும் PCOD குணமாகும்.

Exit mobile version