Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் எந்த கிழமையில் பிறந்தவர்கள்!! நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்கள் தலையெழுத்தை சொல்லலாம்!!

What day are you born!! You can say your initials by your date of birth!!

What day are you born!! You can say your initials by your date of birth!!

பொதுவாக ஒவ்வொரு கிழமைகளில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல்கள் மற்றும் சிறப்புகள் உள்ளது. ஒருவேளை ஒரு சிலருக்கு பிறந்த கிழமைகள் தெரியாமல் இருக்கலாம் அல்லது பிறந்த கிழமை தெரிந்தும் ஜாதகம் இல்லாமல் இருக்கலாம். அவர்களும் இங்கு கூறப்போவதை வைத்து தங்கள் வாழ்க்கையில் நடப்பது எந்த கிழமையோடு ஒத்துப் போகிறது என்பதை ஆராய்ந்து அவரவர் வாழ்க்கையை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

திங்கள் கிழமை: திங்கள் கிழமை என்பது சந்திரனுக்கு உரிய நாள். இவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் அதிகமாகவே இருக்கும். மேலும் இவர்கள் கற்பனை உலகில் நிரம்பியவர்கள் ஆகவும் இருப்பார். இவர்களுடைய ஆளுமை தன்மை வாழ்க்கை பாதையை வழி வகுப்பதிலேயே செயல்படும். இவர்களது குணங்களும் சில அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த கிழமையில் பிறந்தவர்கள் அழகாகவும், நேர்த்தியாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு பௌர்ணமி நாள் சிறந்த நாளாக இருக்கும். நடக்காத ஒன்றை நடந்ததாக எண்ணி அதிக கவலை கொள்வதும், அதிக ஆனந்தம் கொள்வதும் இவர்கள்தான். இந்த கிழமையில் பிறந்தவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் ஆகவும், உணர்ச்சிவசப்படுபவர்கள் ஆகவும், இரக்க குணம் உடையவர்களாகவும், குடும்பங்களின் தேவைக்கு ஏற்ப செல்வங்களை சேகரிப்பவர்கள் ஆகவும் இருப்பார்.

செவ்வாய் கிழமை: பொதுவாக செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் மிகுந்த ஆற்றல் கொண்டவர்களாகவும், உறுதியானவர்களாகவும் இருப்பார்கள். அதேசமயம் ஆக்ரோஷமானவர்களாகவும், முரட்டுத்தனம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தனது இலக்கை நோக்கி சென்று அதில் வெற்றி காண்பவர்களாகவும் இருப்பார்கள். எனினும் அதில் தோல்வி அடைந்தால் தனது கோபத்தை முரட்டுத்தனமாக வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் ஒரு வேலையை தொட்டால் அதனை முழுமையாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். சவால்கள் என்றால் அதற்கு பயந்து நிற்காமல் அதில் உற்சாகமாக இறங்கி வெற்றியும் காண்பார்கள். இவர்களது காதல் வாழ்க்கையிலும் சரி எதிர்கால வாழ்க்கையிலும் சரி தங்களது முரட்டுத்தனத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் நல்லதே நடக்கும்.
புதன் கிழமை: இந்த கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாகவும், உறுதியானவர்களாகவும் இருப்பார்கள். அவர்களது புத்தியிலும், படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் மிகவும் அன்பானவர்களாகவும், மற்றவர்களிடம் பேசியே தன்வயப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் ஒரு செயலில் சோர்ந்து போனாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ அதில் வெற்றியடைய மீண்டும் உற்சாகமாக செயல்படுவார்கள்.
பொதுவாகவே இவர்கள் எல்லா விதமான தகவல்களையும் அறிந்து வைத்திருப்பவர்கள் ஆகவும், அதனை மற்றவர்களுக்கு விளக்குபவர்களாகவும் அறிவில் சிறந்து விளங்குவார்கள். ஆனால் இவர்கள் சில நேரங்களில் சந்தேக குணம் கொண்டவர்களாகவும், கவனக்குறைவு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
வியாழன் கிழமை: இந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு குருவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். பொதுவாக இவர்கள் வட்ட முகம், வலுவான பற்கள் மற்றும் புத்திசாலித்தனமானவர்களாகவும் இருப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் போராடி வெற்றி பெறுபவர்கள் ஆகவும் இருப்பார்கள். இவர்களை சுற்றி எப்பொழுதும் நல்ல நண்பர்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். அதே சமயம் இவர்கள் கடினமான வழிமுறைகளை பின்பற்றினால் எதிரிகளின் கூட்டமும் இவர்களுக்கு சேரும். மிகுந்த ஆர்வத்துடன் தன் வாழ்க்கையை வாழ்வார்கள்.
இவர்கள் ஆன்மீகப் பண்பு கொண்டவர்களாகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டும் பண்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தனக்கு என்று எதையும் தேடி கொள்ளாதவர்களாகவும், அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பழகுபவர்களாகவும் இருப்பார்கள்.
வெள்ளிக்கிழமை: இந்தக் கிழமை சுக்கிரனுக்கு உரிய நாளாகும். வீடு வாங்குவது, செல்வம் சேகரிப்பது மற்றும் கணவன் மனைவி உறவு ஆகிய அனைத்திலுமே இவர்கள் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் ஒரு விதமான ஈர்ப்பு தன்மையை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எதிரிகள் பொறாமை கொள்ளும் அளவிற்கு தனது வாழ்க்கையை வாழ்வார்கள்.
தன்னைச் சுற்றி எப்பொழுதும் நேர்மறையான எண்ணமே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அனைவரிடமும் உண்மையாகவே இருப்பார்கள். இவர்கள் எளிதில் காதல் வயப்படுபவர்கள் ஆகவும், உணர்ச்சிவயப்படுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்கள் தங்களது ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சனிக்க…

Exit mobile version