Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அம்மா உணவகத்தை அடித்து சூறையாடிய இரு வரையும் என்ன செய்தார்!!  திமுக பொதுச் செயலாளர் அதிரடி தீர்வு!!

What did mom do to both of the 2 who beat and looted the restaurant !! DMK General Secretary Action Solution !!

What did mom do to both of the 2 who beat and looted the restaurant !! DMK General Secretary Action Solution !!

அம்மா உணவகத்தை அடித்து சூறையாடிய இரு வரையும் என்ன செய்தார்!!  திமுக பொதுச் செயலாளர் அதிரடி தீர்வு!!

நேற்று காலை சென்னை ஜெ.ஜெ. நகரில் உள்ள அம்மா உணவகத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த இருவர் ரகளையில் ஈடுபட்டனர்.  அங்கிருந்த சமயலறையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து சூரையாடினர். பின்னர், வெளியில் இருந்த அம்மா உணவக பெயர் பலகையையும் விலை பட்டியலையும் கிழித்து எறிந்தனர். இந்த ரகளை சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏராளமான மக்களுக்கு உணவு அளித்த  உணவகத்தை தி.மு.க ஆட்சிக்கு வந்த உடனேயே தாக்குகிறார்கள் என்ற கருத்துடன் மக்களியே சந்தேகத்தை ஏற்படுதியுள்ளது. மேலும் தி.மு.க. ஆட்சி பதவி பிரமானம் செயும் முன்பே அவர்களின் அராஜக செயல்களில் இறங்கியுள்ளது என மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பாமக நிறுவனரான ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சரான  ஜெயக்குமார் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அம்மா உணவகத்தை சேதப்படுத்திய நவசுந்தர் மற்றும்  சுரேந்திரன் ஆகிய இருவரையும் திமுகவில் இருந்து தற்காலிகமாக  நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்கு பகுதி, 92 வது  வடடத்தைச் சேர்ந்த நவசுந்தர் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அவர்களை அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப் படுவார்கள் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Exit mobile version