மருத்துவர்கள் கூறியது என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவாரா? பரபரப்பில் கட்சி தொண்டர்கள்!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பெரும் உச்சத்தை தாண்டி செல்கின்றது.மாவட்ட வாரியாக கொரோனா தொற்று 434 ஆக அதிகரித்துள்ளது.அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அன்றைய தினம் அவருக்கு காலையில் உடல் சோர்வுடன் இருந்த நிலையிலும் அரசு சார்பில் நிகழ்ந்த இரு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.பிறகு நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்து பார்த்ததில் மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதை தெரிவித்தனர்.
பின்னர் அவரே தன்னுடைய டுவிட்டர் பதிவில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதைதொடர்ந்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கூறியிருந்தார்.
என்நிலை அறிந்து யாரும் கவலை கொள்ள வேண்டாம்.நான் விரைவில் குணமடைவேன் என்றும் ,மேலும் அந்த பதிவில் அனைவரும் முககவசம் அணிவதோடு மட்டுமல்லாமல் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு பாதுகாப்பாய் இருப்போம் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தனிமைப்படுத்தி கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக நேற்று பிற்பகல் 12 மணிக்கு மேல் அவருடைய இல்லத்தில் இருந்து புறப்பட்டு வந்தார்.
அப்போது அவருக்கு திடீரென்று தொண்டை மற்றும் உடல் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிற்பகலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து காவேரி ஆஸ்பத்திரியின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது,கொரோனா அறிகுறிகளுக்கான பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்புக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் சிகிச்சை முடிந்து இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்படுகிறது.இதனால் முதல்வருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவரது கோவை வருகை ரத்து செய்யப்பட்டதால் கட்சிக்காரர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.