Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பூக்கள் நமது கனவில் வந்தால் என்ன அர்த்தம்?? எந்த பூக்கள் கனவில் வந்தால் என்ன பலன்..!!

பூக்கள் கனவில் வருவது மிகவும் மங்களகரமான விஷயமா தான் சொல்லப்படுகின்றது.நம் மனதில் அதாவது ஆழ் மனதில் இருக்கக்கூடிய நிகழ்வுகள் தான் நமக்கு கனவாக வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், நம்மளுக்கு சில கனவுகள் நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் வரப்போவதையும், நடக்கப்போவதையும் நமக்கு உணர்த்தும் ஒரு கனவாகவும் ஒரு சிலருக்கு வரும்.

நமக்கு பணம் வரப் போகிறது என்றால் அதற்கேற்ற கனவு வரும். நம் வீட்டில் ஏதாவது சுப நிகழ்ச்சி நடக்க போவதற்கும் அந்த கனவு வந்து வெளிப்படுத்திவிடும். அதேபோல் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்றால் அந்த ஒரு கெட்ட கனவாக நமக்கு வந்து மனதில் ஒரு சஞ்சலத்தை உண்டு பண்ணும். இந்த மாதிரி கனவுகளுக்கும் நம்ம வாழ்க்கையில நடக்கப்போற நிகழ்வுகளுக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்கின்றது. இப்போது பூக்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பது குறித்து காண்போம்.

பூக்கள் உங்கள் கனவில் வந்தாலோ அல்லது அந்த பூக்கள் உங்கள் கைகள் நிறைய இருந்தாலோ அது உங்களுக்கு நல்ல சகுனித்தை தான் குறிக்கும். அது ஒரு கெட்ட சகுனம் கிடையாது. பூக்களை கனவில் கண்டாலே உண்மையிலே உங்களுக்கு நல்லதே நடக்கும்.

மஞ்சள் நிற உங்கள் கனவில் வந்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும், செல்வ செழிப்பு வந்து பெருகும். மல்லிகை பூவை நமது கனவில் காண்பதும் மிகவும் நல்லது. உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க போவதை முன்கூட்டியே உணர்த்துவது தான் இந்த மல்லிகைப்பூ கனவு.

அதேபோல பவளமல்லி பூவை உங்கள் கனவில் கண்டால் தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும் என்று அர்த்தம்.வெள்ளை தாமரையை கனவில் கண்டால் சரஸ்வதி தேவியின் பரிபூரணமான அருள் உங்களுக்கு கிடைக்கும், கல்வியில், வேலையில் உயர்வான நிலையை நீங்கள் அடைவீர்கள். அதேபோல ரோஜா பூவை கனவில் கண்டால் நீங்கள் செய்த செயலுக்கு பாராட்டுக்கள் குவியும், பதவி உயர்வு இதுபோன்ற ஆதரவான நிலை உங்களுக்கு ஏற்படும்.

முல்லை பூவை உங்கள் கனவில் கண்டால் தாய் வழி உறவில் உங்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.பன்னீர் பூவை உங்கள் கனவில் கண்டால் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து உங்களுக்கு சேரும்.

சாமந்திப்பூவை உங்கள் கனவில் கண்டால் உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் கண்டிப்பா நடக்கும். அதே போல வாடாமல்லி பூவை கனவில் கண்டால் உறவினர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். அல்லி பூவை உங்கள் கனவில் கண்டால் மனைவி வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

செந்தாமரை உங்கள் கனவில் வந்தால் லட்சுமி கடாட்சம் பெருகப் போகின்றது, மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது என்று அர்த்தம். அதேபோல இந்த தாமரையோடு வெள்ளைப் பூக்கள், பூ மாலைகள், தாமரைப்பூ மாலைகள் இது போன்றவைகள் உங்கள் கனவில் வந்தால் அல்லது மற்றவர்கள் இதையெல்லாம் உங்க கழுத்துல போடுவது மாதிரியோ உங்க கைகளில் தருவது மாதிரியோ கனவு கண்டால் பெரும் புகழும், பெரும் செல்வமும் உங்களுக்கு வந்து செல்வாக்கும் வரப்போகிறது என்று அர்த்தம்.

சிவப்பு நிற மலர்கள் பொதுவாக இந்த சிவப்பு நிறம் மலர்கள் உங்கள் கனவில் வந்தால் தெய்வங்களின் அருட்கடாட்சம் உங்களுக்கு இருக்கின்றது என்று அர்த்தம். செடியில் இருந்து பூக்கள் பறிப்பது போல கனவு கண்டால் நல்ல பலன்கள் தான் உங்களுக்கு உருவாகும். அதாவது நிலம், வீடு, நகை வாங்கும் யோகம் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும் என்று அர்த்தம்.

மஞ்சள் நிற மலர்களை உங்கள் கனவில் கண்டால் செல்வ வளம் உங்கள் வீட்டில் அதிகரிக்கப் போகிறது, குபேர யோகம் உங்களுக்கு கிடைக்கப் போகிறது, தானியங்களின் குறைவு நீங்க போகிறது, மங்கள நிகழ்வுகள் நடக்கப்போவதையும் குறிக்கும்.

Exit mobile version