Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

what-happened-to-the-children-at-the-anganwadi-center-intensive-treatment-in-the-hospital

what-happened-to-the-children-at-the-anganwadi-center-intensive-treatment-in-the-hospital

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செல்வழிமங்கலம் பகுதியில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. அந்த அங்கன்வாடியில் சுமார் 13 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் அங்கன்வாடி மையத்தில் ஜம்போடை தெருவை சேர்ந்த வம்சிகா (2),யோகேஷ் (3) மற்றும் பிரியதர்ஷினி(2) ஆகிய மூன்று குழந்தைகளும் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு  குளிர்பனா பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த  மண்ணெண்யை குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளனர்.சிறிது நேரத்தில் மூன்று குழந்தைகளுக்கும் வாந்தி ,மயக்கம் ஏற்பட்டது.உடனடியாக அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் விரைந்து வந்து மூன்று குழந்தைகளையும் மீட்டு சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.இந்நிலையில் அந்த அங்கன்வாடி மையத்தின் ஊழியர் சோபா மற்றும் உதவியாளர் சாந்தி ஆகிய இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் குழந்தைகள் வளர்ச்சி துறை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.பாதிக்கப்பட்டுள்ள மூன்று குழந்தைகளில் யோகேஷ் என்ற குழந்தைக்கு தொண்டை பகுதியில் அதிகம் பாதிப்பு உள்ளதால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

Exit mobile version