மருத்துவமனையில் குடியரசு தலைவருக்கு நடந்து என்ன?
ஓராண்டு காலமாக ஆட்டி படைத்த கொரோனா பல உயிர்களை எடுத்து சென்றுவிட்டது.லாக் டவுன் என்ற பெயரில் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.வருமானம் மற்றும் போக்குவரத்து என மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.அதனையடுத்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிகப்பட்டது.சிறிது சிறிதாக மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்ப பழகி கொண்டு வருகின்றனர்.இருப்பினும் கொரோனா முழுமையாக குறையாத காரணத்தினால் மக்கள் சில வழி முறைகளை பின்பற்றும்மாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டது.அதில் அரசாங்கம் கூறியத, சமூக இடைவெளிவிட்டு செல்ல வேண்டும்.
முக கவசம் மற்றும் கை உரை அணிய வேண்டும்.பொது இடங்களுக்கு சென்ற பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என அரசாங்கம் எச்சரித்து வருகிறது.இருப்பினும் சில மக்கள் இதை சிறிதும் பொருட்படுத்தாமல் தங்களின் வேலைகளை பார்த்து செல்கின்றனர்.மேலும் கொரோனா பரவாமல் இருக்க கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.இதனால் பக்க விளைவுகள் ஏதும் வராத வகையில் பல சோதனைகள் மேற்கொள்ளபட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
கொரொனோ தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என அஞ்சி பொதுமக்கள் யாரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வரவில்லை.இந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த திங்கட்கிழமை அன்று கொரோன தடுப்பூசி போட்டுக்கொண்டார்.மக்களும் கொரொனோ தடுப்பூசி போட முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
அதனையடுத்து குடியரசு தலைவரும் இன்று கொரோன தடுப்பூசி போட்டுக்கொண்டார்.குடியரசு தலைவரான ராம்நாத் அவர்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் கொரோனாக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.